...
செய்திகள்

கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி.

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கொழும்பிலிருந்து யாழ்நோக்கி சென்று கொண்டிருந்த கெப் ரக வாகனம் கனகராயன்குளம் பகுதியில் வைத்து, யாழிலிருந்து வவுனியா நோக்கி வந்த டிப்பர் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் கெப் வாகனத்தில் பயணித்த 50 வயதான நபர் உயிரிழந்துள்ளார். அதன் சாரதி கவலைக்கிடமான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சம்பவ இடத்திற்கு சென்ற கனகராயன்குளம் பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen