செய்திகள்மலையகம்

கனேபல்ல தோட்ட மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துமாறு அமைச்சர் திகா பணிப்பு

எட்டியாந்தோட்டை – கனேபல்ல தோட்ட மக்களினுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் அமைச்சர் பழனி திகாம்பரம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.

கனேபல்ல தோட்டத்தில் உள்ள மக்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ள அமைச்சர் பழனி திகாம்பரம் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு எட்டியாந்தோட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் தொலைபேசி ஊடாக அறிவுறுத்தியுள்ளார்.

மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட வேண்டும் எனவும் இந்த நாட்டில் மக்கள் ஜனநாயக ரீதியில் சுதந்திரமாக வாழ பொலிசார் அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதுமாத்திரமன்றி பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக தொழிலாளர் தேசிய சங்கத்தின் கேகாலை மாவட்ட அமைப்பாளர்களை சங்கத்தின் தலைவர் அமைச்சர் பழனி திகாம்பரம் குறித்த தோட்டத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

Related Articles

Back to top button
image download