செய்திகள்

கனேமுல்ல -நுகவெல வீடொன்றில் துப்பாக்கி பிரயோகம் ஒருவர் பலி .?

கனேமுல்ல கென்தலியத்தபாலுவ,நுகவெல வீதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்ற இந்த துப்பாக்கி பிரயோகத்தில் வேன் சாரதியொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீடொன்றுக்கு வருகை தந்த வேனை பின்தொடர்ந்த மோட்டார் சைக்கிளில் வந்த நபரினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த நபர் மற்றும் சந்கேநபரின் ஆள் அடையாளங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Related Articles

Back to top button
image download