செய்திகள்

கன்னியா வெந்நீர் ஊற்று பகுதிக்கு செல்வோருக்கு மாத்திரம் டிக்கெட் விநியோகம்.

திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று பகுதிக்கு செல்வோருக்கு மாத்திரம் டிக்கெட் விநியோகம் செய்யுமாறும் தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்கள் மட்டும் டிக்கெட் விநியோகம் செய்ய வேண்டும் எனவும் வழங்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

திருகோணமலை மேல் நீதிமன்றம் இந்த  கட்டளையை பிறப்பித்துள்ளது.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்று வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு எதிர்வரும்  22 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

Related Articles

Back to top button