சினிமா

`கபாலி’, `பாகுபலி-2′ பட வரிசையில் விஜய் நடித்து வரும் `மெர்சல்’ படத்திற்கு புதிய அந்தஸ்து ஒன்று கிடைக்கவிருக்கிறது.

அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன்  இணைந்து நடித்து வரும் படம் `மெர்சல்’.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படமாக உருவாகி வரும் இப்படம் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தில் இருந்து பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் மெர்சல் படத்தின் டீசர் உலகளவில் புதிய சாதனையையும் படைத்திருக்கிறது.

படத்தை விளம்பரப்படுத்த தயாரிப்பு நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், படத்தின் வியாபாரமும் சூடுபடித்துள்ளது.

இந்நிலையில், மெர்சல் படத்திற்கு புதிய அந்தஸ்து ஒன்றும் கிடைக்கவிருக்கிறது. அது என்னவென்றால், ஐரோப்பாவின் மாபெரும் திரையரங்கமான பாரீசின் `லீ கிராண்ட் ரெக்ஸ்’ (Le Grand Rex) திரையரங்கில் மெர்சல் படம் திரையிடப்பட இருப்பதாக `லீ கிராண்ட் ரெக்ஸ்’ அதன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறது.

சுமார் 2200 பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய பிரம்மாண்டமான திரையரங்கம் ‘லீ கிராண்ட் ரெக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரையரங்கில் திரையிடப்பட்ட முதல் இந்திய படமாக ரஜினியன் ‘கபாலி’ படம் இடம் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து `பாகுபலி-2′ படம் திரையிரப்பட்டது.

இந்நிலையில், விஜய்யின் `மெர்சல்’ படத்திற்கு அந்த அந்தஸ்து கிடைக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button