ஆன்மீகம்

கம்பளை – அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில்

மத்திய மாகாணம் – கண்டி மாவட்டம் – கம்பளை – அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில்

பூவுலகில் உயிர்களுக்கெல்லாம் தாயாக இருப்பவளே
புனிதமிகு வாழ்வுக்கு ஏற்றவழி வேண்டுமம்மா
கேட்டவரம் தந்தெம்மை மீட்சி பெற வழிதருவாய்
கம்பளையில் கோயில் கொண்ட தாயே முத்துமாரியம்மா

மலைசூழ்ந்த திருநகரில் அருளொளியாய் இருப்பவளே
மனமகிழ்வு நாம் கொள்ள ஏற்றவழி வேண்டுமம்மா
நம்பிவரும் அடியவர்கள் மேன்மைபெற வழிதருவாய்
கம்பளையில் கோயில் கொண்ட தாயே முத்துமாரியம்மா

கம்பளை நன்னகரின் ஒளிவிளக்காய் இருப்பவளே
கவலைகளைக் களைந்திடவே வழிகாட்ட வேண்டுமம்மா
மனவமைதி கொண்டோராய் நாம் வாழ வழிதருவாய்
கம்பளையில் கோயில் கொண்ட தாயே முத்துமாரியம்மா

நம்பிக்கை தந்தென்றும் வழிகாட்டி இருப்பவளே
அச்சம் களைந்தெம்மை ஆட்கொள்ள வேண்டுமம்மா
மானமுடன் நாம் வாழ உரிய வழிதருவாய்
கம்பளையில் கோயில் கொண்ட தாயே முத்துமாரியம்மா

வளம் பெற்று நாம்வாழ உறுதுணையாய் இருப்பவளே
வளமாக வாழ்வதற்கு உன் கருணை வேண்டுமம்மா
மகிழ்வு நிறை வாழ்வு வாழ ஏற்ற வழிதருவாய்
கம்பளையில் கோயில் கொண்ட தாயே முத்துமாரியம்மா

மாசற்ற மனதுடனே அருள் வழங்கி இருப்பவனே
முத்தமிழர் இப்புவியில் மேன்மையுற வேண்டுமம்மா
என்றும் நாம் இப்புவியில் தலைநிமிர வழிதருவாய்
கம்பளையில் கோயில் கொண்ட தாயே முத்துமாரியம்மா.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button