மலையகம்

கம்பளை பகுதியில் மரக்கறி லொறி விபத்து! இருவர் வைத்தியசாலையில்

கம்பளை அட்டப்பாதை பகுதியில் மரக்கறி லொறி ஒன்று பாதையிலிருந்து விலகி 150 அடி பள்ளத்தில் விழுந்து விபதுக்குள்ளானதில் இருவர் படுங்காயமடைத்துள்ளனர். !

குறித்த சம்பவமமானது இன்று (09.04.2018) இடம்பெற்றுள்ளது.

நுவரெலியா பகுதியிலிருந்து தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கு மரக்கறி ஏற்றிச்சென்ற டிப்பர் ரக லொறியே இந்த விபத்துக்குள்ளாகியது.

லொறியின் சாரதியும், உதவியாளருமே காயங்களுக்குள்ளாகி கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் -ஷான் சதீஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button