செய்திகள்

கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில்

கம்பளையில் கோயில் கொண்ட மாரியம்மா
கவலையற்று நாம் வாழ துணையிரம்மா
மாசற்ற அன்பு கொண்ட மாரியம்மா
மாண்புடனே வாழவழி தந்திடம்மா

புண்ணியர்கள் போற்றுகின்ற பேரருளே
புவனமெங்கும் காவல் செய்ய வந்திடம்மா
பாசமுடன் அணைத்தருளும் மாரியம்மா
பாதகங்கள் போக்கியெம்மை காத்திடம்மா

எங்கும் நிறை இணையில்லா நிறைமகளே
எங்களுக்கு வளமளிக்க வந்திடம்மா
ஆதரித்து அரவணைக்கும் மாரியம்மா
ஆட்சிசெய்ய கருணையுடன் வந்திடம்மா

பசிபோக்கி உயிரளிக்கும் அன்புருவே
பாதையினைச் சீராக்க வந்திடம்மா
துணையிருந்து வளமளிக்கும் மாரியம்மா
தளராத நிம்மதியைத் தந்திடம்மா

அறிவளித்து வழிநடத்தும் தலைமகளே
அச்சமில்லா வாழ்வை நீ தந்திடம்மா
நம்பி உந்தன் அடிபணியும் பக்தர்க்கு
நிலை குலையா வளத்தினை நீ தந்திடம்மா.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com