செய்திகள்

கம்பஹா உட்பட பல பகுதிகளில் இன்று 8 மணிநேர நீர் வெட்டு!

கம்பஹா உட்பட பல பகுதிகளில் இன்று (22) 8 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இன்று இரவு 10.00 மணி முதல் நாளை (23) காலை 06.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும்.

அக்காலப்பகுதியில், கம்பஹா நகரம், கம்பஹா மிரிஸ்வத்த வீதியில் ஹன்சகிரி வீதி வரையான பகுதி, யக்கல வீதியில் ஹன்சகிரி வீதி வரையான பகுதி, ஒருதொட்ட வீதியில் களு பாலம வரையிலான பகுதி, உடுகம்பொல வீதியில் சதொசவுக்கு அருகில் உள்ள பாலம் பகுதி மற்றும் ஜா-எல வீதியில் உள்ள புகை பரிசோதனை நிலையம் வரையான பகுதியிலும் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் யக்கல பாலத்தின் குழாய் அமைப்பில் ஏற்பட்டுள்ள திருத்தப்பணிகள் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button