...
செய்திகள்

கம்பஹா மாவட்டம்- நீர்கொழும்பு கடற்கரைத்தெரு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கதிர்வேலாயுத சுவாமி திருக்கோயில் ..

கதிர் வேலவனை அருகு கொண்டு அருள் வழங்கும் மாரியம்மா
குவலயத்தில் குறைபோக்கி அருளிடவே வருவாயம்மா
மனக்கவலை இல்லாது நிம்மதியை நாமடைய
உடனிருந்து எங்களுக்கு அருள் தருவாய் தாயே
மேற்கிலங்கை கடற்கரையில் கோயில் கொண்ட மாரியம்மா
மேன்மைமிகு பெருவாழ்வை நமக்கருள வருவாயம்மா
வாழநல்ல வழியமைத்து வளம் பெற்று நாம் உய்ய
உன்னடியார் எங்களுக்கு ஆறுதலைத் தருவாய் தாயே
நீர்கொழும்பு மாநகரில் நின்றருளும் மாரியம்மா
நீக்கமற உன்கருணை நாம்பெற்று நலமடைய வழிதரவே வருவாயம்மா
கடலலை போல் தழும்பாத மனநிலையை நாம்பெறவே
காத்து, அரவணைத்து அருள் தருவாய் தாயே
கதிர்வேலோன் கைவேலால் எமைக்காக்க அருளுகின்ற மாரியம்மா
கந்தனது அருளையும் எமக்கிணைத்து தந்தருள வருவாயம்மா
வளம் பெற்று மேன்மை நிலைநாம் அடைய 
எதிர்காலம் ஏற்றம் பெற வழிதருவாய் தாயே
கடற்கரைத் தெருவிலிருந்து பாராளும் மாரியம்மா
கபடமில்லா மனத்தினராய் நாம்வாழ அருள் தரவே வருவாயம்மா
நெருங்கி வரும் துன்பங்களை அண்டாது தடுத்திடவே
நிலையான நிம்மதியை எமக்குத் தருவாய் தாயே
அதர்மத்தை அழித்தொழிக்க அவதரிக்கும் மாரியம்மா
பகையின்றி, பயமின்றி வாழ வழிதர வருவாயம்மா
உன்துணையில் நிம்மதியை நாமடைந்து மேன்மையுற
உரிய வழி காட்டியெம்மை வாழ வழிதருவாய் தாயே.
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen