செய்திகள்

கம்போடியாவில் இலங்கை தூதரகம் ஜனாதிபதி உறுதி.

கம்போடியாவில் இலங்கை தூதுரகத்தை விரைவில் ஸ்தாபிக்க உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அதுவரை இரு நாடுகளுக்கும் இடையிலான இணைப்பு செயற்பாடுகளுக்காக  கொன்சியூலர் நாயகம் ஒருவர் செயற்படுவார் எனவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கூறியுள்ளார்.

கம்போடிய தலைநகரிலுள்ள விகாரைக்கு வழிபாடுகளுக்கு  சென்ற போதே ஜனாதிபதி இந்த விடயத்தை கூறியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பௌத்த தர்மம் தொடர்பில் தௌிவுப்படுத்தும் செயற்றிட்டங்களுக்காக இலங்கை மற்றும் கம்போடியா ஆகிய இருநாடுகளும் அர்பணிப்பு செய்ய வேண்டும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீட்டு மற்றும் வர்த்தக செயற்பாடுகளை விஸ்தரிப்பதற்கான கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button