செய்திகள்

கம்மன்பிலவுக்கு எதிரான பிரேரணை குறித்து அடுத்தவாரம் அறிவிப்பு.!

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக, ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளும் தினம் குறித்து, அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ளது.

ஜுலை மாதம் முதலாம் திகதி இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் குறித்த தினம் தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது.

இதன்போது, பாராளுமன்ற அமர்வு வாரத்தில் எத்தனை நாட்களுக்கு அடுத்த அமர்வை நடத்துவது என்பது குறித்தும் தீர்மானிக்கப்பட உள்ளதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

43 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லப் பிரேரணை, கடந்த 22 ஆம் திகதி பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் வைத்து சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button