செய்திகள்

கரடியனாறு இராணுவ வாகனம் விபத்தில் இருவர் பலி : 4 பேர் காயம்

மட்டக்களப்பு – கரடியனாறு கறுப்பு பாலத்தின் ஊடாக இராணுவ வாகனமொன்று ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அத்துடன், இந்த விபத்தில் மேலும் 4 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் தற்போது, சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாகரை இராணுவ முகாமை சேர்ந்த இராணுவத்தினர் பயணித்த வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Back to top button