செய்திகள்
கரவனல்ல வாகன விபத்து -சம்பவ இடத்திலையே ஒருவர் உயிரிழப்பு
அவிசாவலை கேகாலை பிரதான வீதியில் கரவனல்ல பாலத்துக்கு அருகில் இன்று காலை (28.09.208) 07மணி அளவில் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒரு குழந்தையின் தந்தை சம்பவ இடத்திலயே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிவதாவது,
அவிசாவலை கரவனல்ல வீதியில் பயணித்த முச்சக்கர வண்டிக்கு பின்னால் வந்த தனியார் பஸ் குறித்த முச்சக்கர வண்டியில் மோதியதால் முச்சக்கர வண்டி முன்னால் வந்த ஆடைத்தொழிலாளர்களை ஏற்றி வந்த மற்றுமோரு பஸ் வண்டிலும் மோதுண்டு குறித்த விபத்து ஏற்பட்டதில் முச்சக்கர வண்டியின் ஓட்டுனர் சம்ப இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும் விபத்து தொடர்பில் பஸ் ஓட்டுனர்கள் இருவரும் தற்போது ருவன்வெல்ல போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளும் நடைபெறுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.