செய்திகள்

கருங்கல், மண் மற்றும் மணல் அகழ்விற்கான பகுதிகளை உரிய முறையில் புனரமைப்பு செய்யாதோருக்கு மீண்டும் அனுமதி பத்திரம் இல்லை…

கருங்கல், மண் மற்றும் மணல் அகழ்விற்கான பகுதிகளை உரிய முறையில் புனரமைப்பு செய்யாதோருக்கு மீண்டும் அதற்கான அனுமதி பத்திரத்தை வழங்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கருங்கல், மண் மற்றும் மணல் அகழ்விற்கான பகுதிகளை உரிய முறையில் பேணாவிடின், குறித்த பகுதிகள் கடுமையாக சேதமடையும் என சுற்றாடல் அமைச்சு அறிக்கையூடாக தெரிவித்துள்ளது.

அந்த பகுதிகளில், விலங்குகள் உள்ளிட்டவை விபத்திற்கு உள்ளாவதுடன், சில சந்தர்ப்பங்களில் உயிரிழப்புகளும் பதிவாவக்கூடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கருங்கல், மண் மற்றும் மணல் அகழ்விற்கான பகுதிகளை புனரமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், மக்களை ஈர்க்கும் வகையில், அவற்றை அபிவிருத்தி செய்யுமாறு புவுசரிதவியல் மற்றும் சுரங்கப்பணியத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
image download