செய்திகள்விளையாட்டு

கர்ணல் பாண் வீரருடன் நெருங்கிய தொடர்பை கொண்ட 8 வீரர்களின் பிசிஆர் முடிவுகள் வெளியாகின

இலங்கையுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணிவீரர் க்ருணல் பாண்ட்யாவுக்கு கொவிட் தொற்று உறுதியானதையடுத்து, அவருடன் நெருங்கிய தொடர்பை பேணிய இந்திய அணியைச் சேர்ந்த 8 வீரர்களுக்கும் நேற்று பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது அவர்கள் 8 பேருக்கும் கொவிட் தொற்றுறுதியாகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்திய அணி வீரர் க்ருணல் பாண்ட்யாவுக்கு கொவிட் தொற்று உறுதியானதையடுத்து, நேற்று நடக்கவிருந்த இரண்டாவது 20க்கு இருபது கிரிக்கெட் போட்டி இன்று வரை பிற்போடப்பட்டது. 

இதற்கமைய, அந்தப் போட்டி இன்று ஆர்.பிரேமாதாச விளையாட்டு அரங்கில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button