மலையகம்
கறுப்பு பட்டியணிந்த ஜ.தே.க உறுப்பினர்கள்
.
மஸ்கெலியா பிரதேசசபையின் கன்னி அமர்வு பிரதேசசபையின் தவிசாளர் கோவிந்தன் சென்பகவள்ளி தலைமையில் இன்று காலை 10மணி ஆரம்பமானது.
இதன்போது, உதவி தவிசாளர் பெரியசாமி பீரதிபன்,மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதேசசபைஉறுப்பினர்கள், மற்றும் ஜக்கிய தேசியக் கட்சியின் பிரதேச்சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
மஸ்கெலியா பிரதேசசபையின் தவிசாளர் நியமனத்தின் போது அநீதி இழைக்கபட்டதாக தெரிவித்து, ஜக்கிய தேசியக் கட்சியின் மஸ்கெலியா பிரதேச்சபை உறுப்பினர்கள் ஏழுபேர், கறுப்பு பட்டி அணிந்து பிரதேச்சபைக்கு பிரவேசித்தனர் .
இதன்போது, மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.ஏ.ரஞ்சனி அவையில் கருத்து தெரிவித்த போது சிலரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.