செய்திகள்

கறுப்பு பூஞ்சை நோய் குறித்த பரிசோதனைகளின் அறிக்கை நாளை வௌியாகும்.!

இந்தியாவில் பரவி வரும் கறுப்பு பூஞ்சை நோய் இலங்கையில் பதிவாகவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் ஒருவர் அம்பாறை பகுதியில் பதிவாகியுள்ளார்.

எனினும், இந்தியாவில் பரவி வரும் கறுப்பு பூஞ்சை நோயினால் அவர் பாதிக்கப்படவில்லை என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன. நோயாளர் தொடர்பில் எடுக்கப்பட்ட பரிசோதனைகளின் அறிக்கை நாளை வௌியாகும் என எதிர்பார்ப்பதாகவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com