செய்திகள்நுவரெலியாமலையகம்

கற்பாறைகள் சரிந்து விழும் அபாயத்தில் வாழும் கெம்பியன் கீழ் பிரிவு தோட்ட மக்கள்

மலையகத்தில் தொடர்ந்து பெய்துவரும் அடை மழை காரணமாக, பொகவந்தலாவ கெம்பியன் கீழ்பிரிவு தோட்டப் பகுதியில் பாரிய கற்பாறைகள் மற்றும் மண்மேடுகள் சரிந்து விழும் அபாயத்தில் தாம் வாழ்ந்து வருவதாக, பொகவந்தலாவ கெம்பியன் கீழ் பிரிவு தோட்ட மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

பொகவந்தலாவ கெம்பியின் கீழ்பிரிவு தோட்டப்பகுதியில் உள்ள 13ம், 14ம் தொடர் லயன்குடியிருப்புக்கு மேல் உள்ள கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம் காரணமாக, குறித்த மக்கள் வாழும் குடியிருப்புகளின் சுவர்களில் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதேவேளை, 13ம் இலக்க தொடர் லயன் குடியிருப்பு தாழ் இறங்கியுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கடந்த காலங்களிலும் தமது லயன் குடியிருப்புக்கு அருகில் மண்சரிவு ஏற்பட்ட போது, இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குடியிருப்புகளில் இரவு நேரங்களில் உறங்க முடியாத நிலைமை காணப்படுவதாகவும், எந்தநேரத்திலும் கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மீரியாபத்த போன்று தமது கெம்பியன் தோட்டபகுதியிலும் சம்பவம் இடம்பெறாமல் இருப்பதை தடுப்பதற்கு தமது தோட்ட லயன் குடியிருப்பில் வாழும் 33 குடும்பங்களையும் பாதுகாப்பதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கெம்பியன் கீழ் பிரிவு தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

சம்பவத்தை அறிந்த நோர்வுட் பிரதேசசபையின் தலைவர் ரவிகுழந்தைவேல் இன்றய தினம் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடினார்.

– eelanadu

Related Articles

Back to top button