...
செய்திகள்

கற்பிட்டியில் சிலை உடைப்பு!

கற்பிட்டி சவக்காலையில் வைக்கப்பட்டிருந்த இயேசுநாதரின் திருச் சிரூபம் கீழே அடித்து நொருக்கப்பட்டுள்ளமை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கற்பிட்டி சென். மேரிஸ் வீதியிலுள்ள கிறிஸ்தவ சவக்காலையில் உள்ள செபம் படிக்கும் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த இயேசுநாதரின் திருச் சிரூபம் நிலத்தில் கீழே அடித்து நொருக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், குறித்த சவக்காலையில் அடக்கம் செய்யப்பட்டவர்களின் அடையாளத்திற்காக பெயருடன் புதைக்கப்பட்ட சுமார் 40 சிலுவைகள் (குருஸ்) இதன்போது சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினம் (23) இரவு தமக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, நேற்று (24) சம்பவ இடத்திற்கு வருகை தந்த கற்பிட்டி பொலிஸாரும், புத்தளம் தடயவியல் பொலிஸாரும், கை ரேகை பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அத்துடன், மோப்ப நாய் கொண்டுவரப்பட்டு சவக்காலை உள்ள பகுதியில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.

இன்று (25) புனித நத்தார் பண்டிகைக் கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ள நிலையில், இவ்வாறு யோசுநாதரின் திருச் சிரூபம் கீழே அடித்து நொருக்கப்பட்டு, சிலுவைகள் சேதமாக்கப்பட்டுள்ளமை அந்தப் பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இனங்களுக்கிடையில் முறுகலை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறு சிலை மற்றும் சிலுவைகள் உடைக்கப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர், பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் ஆலோசனையில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen