செய்திகள்

கற்பிட்டி – எத்தல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வரிசையில் குழப்ப நிலை !

கற்பிட்டி – எத்தல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கற்பிட்டி எத்தல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட வரிசையில் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக காத்திருந்தபோது வரிசையில் நின்றவர்களுக்கு இடையில் இவ்வாறு மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது தலையில் பலத்த காயங்களுக்குள்ளான இருவர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலும் இருவர் கற்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Articles

Back to top button