கல்விபதுளைமலையகம்

கற்றலுக்கு கரம் கொடுத்த- ஊவா அறவாரியம்..

ஊவா மாகாணத்தில் மிகவும் பின்தங்கிய பாடசாலைகளான ப/ உடவெறிய தமிழ் வித்தியாலயம், ப/வெஸ்ட் அப்புத்தளை தமிழ் வித்தியாலயம் ஆகிய இருபாடசாலைகளையும் தெரிவுசெய்து, அப்பாடசாலைகளில் கல்வி கற்கின்ற வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 04/02/2020 அன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வு ஊவாஅறவாரியத்தலைவர் ஆனந்தராஜா தலைமையில் இடம்பெற்றதோடு.பண்டாரவளைக் கிளை
கொமர்ஷல் வங்கி அதிகாரிகள்,சமூக ஆர்வலர்கள், பதுளை – சென்ஜேமஸ் தமிழ் வித்தியாலய அதிபர், நீட்வுட் தமிழ் வித்தியாலய அதிபர் பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இவ்விரு பாடசாலைகளிலும் கல்வி கற்கும் 74 மாணவர்களுக்கு அத்தியவசியமான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. உதவிகரம் நீட்டி அறப்பணியாற்றும் ஊவா அறவாரியத்திற்கும் சமூக ஆர்வலர்களுக்கும் இப்பகுதி பெற்றோர்களும் மாணவர்களும் நன்றியைத் தெரிவிக்கின்றனர்.

நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Back to top button
image download