செய்திகள்

கலவான பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலி.

கலவான மத்துகம வீதியின் கல்கெட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கலவான பகுதியில் இருந்து மத்துகம நோக்கி  பயணித்த சிறிய ரக லொறியொன்று வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு லொறியுடன் மோதி நேற்றிரவு 10.30 அளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த சிறிய ரக லொறியின்சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளனர்.

Related Articles

Back to top button
image download