செய்திகள்

கல்பிட்டி குடாவ கடற்பகுதியில் பத்து கிலோகிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

கல்பிட்டி குடாவ கடற்பகுதியில் பத்து கிலோகிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் 04 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவிருந்து சட்ட விரோதமாக படகு மூலம் தங்கம் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

900 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கம் சந்தேகநபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மிக நீண்ட காலமாக சந்தேகநபர்கள் படகு மூலம் தங்கம் கடத்துகின்றமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கந்தக்குளிய மற்றும் கல்பிட்டிய பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Back to top button
image download