செய்திகள்

கல்முனையில் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்..!

கல்முனையில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று (28) மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் பெறுபேறுகளின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் இரவு வரை கிடைக்கப்பெற்ற PCR மற்றும் Antigen பரிசோதனைகளின் பிரகாரம் 1058 நபர்கள் தொற்றுள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியர் அழகையா லதாகரன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 12 மணி நேரத்திற்குள் PCR மற்றும் Antigen பரிசோதனைகளின் படி, கோமறன்கடவல பகுதியை சேர்ந்த ஒருவர், கல்முனை வடக்கு பிரசேத்தில் மூவர், கல்முனை தெற்கில் 26 பேர், சாய்ந்தமருது பகுதியில் ஒருவர், காரைதீவு பகுதியில் ஒருவர், சம்மாந்துறை பகுதியில் ஒருவர், மட்டக்களப்பில் ஒருவர், காத்தான்குடியில் நால்வர், வெல்லாவௌி பகுதியில் ஒருவர், ஆரையம்பதியில் ஒருவர், தமன பகுதியில் ஒருவர் அடங்கலாக 41 பேர் மேலதிகமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியர் மேலும் கூறினார்.

இவற்றில் விசேடமாக கல்முனையில் சுகாதாரத்துறை, பொலிஸ் மற்றும் இராணுவத்தினருடன் இணைந்து கல்முனை பொதுச் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் போது 27 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதாக அவர் கூறினார்.

ஆகவே, இந்த தொற்றானது கல்முனையில் மேலுமொரு கொத்தணி உருவாகக்கூடிய அபாய நிலை காணப்படுவதால், கல்முனை பகுதியில் 1, 2 மற்றும் 3 என ஆரம்பிக்கின்ற கிராம சேவகர் பிரிவுகளும் அதேநேரம் கல்முனை குடியில் 1,2 மற்றும் 3 என ஆரம்பிக்கின்ற கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் இன்றிலிருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button