செய்திகள்

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை..?

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரை இந்த விடுமுறை அமுலில் இருக்கும் என கிழக்கு மாகாண ஆளுனரின் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

அம்பாறை மாவட்டத்தில் இன்று 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட 150 பீ சீ ஆர் பரிசோதனைகளில் 21 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button