செய்திகள்

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை !

எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.இதன்படி, போக்குவரத்து சிரமங்கள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை பாதிக்காத நிலையில் பிரதேச மட்டத்தில் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை ஆரம்பித்து பராமரிக்க மாகாண கல்வி அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாடசாலைக்குச் செல்ல முடியாத மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, அதிபர்கள் வலயக் கல்விப் பணிப்பாளருடன் கலந்தாலோசித்து, அந்த நிலையிலும் பாடசாலையை பராமரிக்க முடியுமாயின் உரிய நடவடிக்கை எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

மாகாண வலய மற்றும் பிரதேச கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்கள் தொடர்பில் மாகாணக் கல்விப் பணிப்பாளர்களால் எடுக்கப்பட்ட கருத்துக்கள் இந்த தீர்மானங்களை மேற்கொள்ளும் போது கவனத்தில் கொள்ளப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button