கல்வி

கல்வி பொது தராதர உயர் தர பரீட்சை இன்று ஆரம்பமானது..

பரீட்சைகள் இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை 2 ஆயிரத்து 678 மத்திய நிலையங்களில் இடம்பெறுகின்றன.

இம்முறை உயர் தரப்பரீட்சையில் மூன்று இலட்சத்து 35 ஆயிரத்து 704 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 8.30 க்கு பரீட்சைகள் ஆரம்பமாகியதுடன்,காலை 8 மணிக்கு முன்னர் பரீட்சார்த்திகள் பரீட்சை நிலையத்திற்கு சமூகமளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அத்துடன் பரீட்சையில் தோற்றும் பரீட்சார்த்திகள் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக பரீட்சை அனுமதிப்பத்திரம்,தேசிய அடையாள அட்டை,வெளிநாட்டு கடவுச்சீட்டு அல்லது சாரதி அனுமதிப்பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

பரீட்சார்த்திகள்,ஏதேனும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுவார்களாயின், எதிர்வரும் 5 வருடங்களுக்கு தடை விதிக்கப்படும் எனவும் பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் தெரிவித்துள்ளார்.

இதனிடைய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் பரீட்சை தொடர்பில் மாணவர்கள் கொண்டிருந்த அழுத்தத்தை குறைப்பதற்கு 3 மணித்தியாலங்களை கொண்ட வினாப்பத்திரங்களுக்கு விடையளிப்பதற்காக மேலதிகமாக 10 நிமிடங்கள் வழங்கப்பட்டவுள்ளது.

Related Articles

Back to top button
image download