செய்திகள்

கல்வி பொது தராதர சாதரணதர வகுப்புகளிற்கு 23ஆம் திகதி முதல் தடை.

கல்விப் பொதுத் தாராதர சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக
வகுப்புகள், மாநாடுகள், முன்னோடி பயிற்சிகள் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளும்
எதிர்வரும் 23 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவு செய்யப்பட வேண்டும் என
பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி தொடக்கம்
10 ஆம் திகதி வரை நடாத்தப்படவுள்ளது.

அதற்கமைய, பரீட்சைக்கான முன்னோடி பயிற்சிக்குரிய வினாத்தாள்களை அச்சிடுதல்,
பகிர்ந்தளித்தல், கையேடுகளை விநியோகித்தல், இலத்திரணியல் ஊடகங்களினூடாக
தகவல்களை பறிமாறுதல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு எதிர்வரும் 23 ஆம் திகதி
தொடக்கம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடை உத்தரவை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள்
திணைக்களம் அறிவித்துள்ளது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com