Breaking Newsநிகழ்வுகள்நுவரெலியாமலையகம்

கல்வி மற்றும் முகாமைத்துவத் துறைகளில் கலாநிதி பட்டம் பெற்ற ஆசிரியர்கள்

மலையகம்

ஹட்டன் பிரதேச ஆசிரியர்கள் ஐவர், , மலையகத்துக்கும் ஹட்டன் மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் ஆசிரியர் செல்லையா குமார், கொட்டகலை கேம்ரிஜ் கல்லூரியின் ஆசிரியர் வேலுப்பிள்ளை ரமேஸ்குமார், பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் முத்தையா கிருஸ்ணகுமார், நுவரெலியா கல்விவலயத்தின் ஆசிரிய ஆலோசகர் வேலுசாமி ஸ்ரீகுமார், கொத்மலை
கல்வி வலயத்தின் கோட்டக் கல்விப் பணிப்பாளர் மாரிமுத்து சுப்ரமணியம் இங்கர்சால் ஆகியோர் அண்மையில் வெளிநாட்டு பல்கலைக்கழகம்
ஒன்றினூடாக கலாநிதி பட்டத்தை பெற்றுள்ளனர்.

இவர்கள் கலாநிதி பட்டத்தை பெறுவதற்கும் இவர்களின் ஆய்வுக்கும் வழிகாட்டியாகவும் வளவாளர்களாகவும் செயற்பட்ட கலாநிதி பொன்னம்பலம்
சிங்கரட்ணம், கலாநிதி சுப்ரமணியம் தனபாலன், கலாநிதி
எஸ்.தெய்வேந்திரன், கலாநிதி சந்திரகுமார் ஆகியோர் இவர்களால் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வு ஹட்டன் அஜந்தா வரவேற்பு மண்டபத்தில் திங்கட்கிழமை (16) நடைபெற்றது. இதன்போது கலாநிதி பொன்னம்பலம் சிங்கரட்ணத்துக்கு
கலாநிதி பட்டம் பெற்ற ஆசிரியர்களால் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

பன்னீர் செல்வம்

Related Articles

Back to top button