மலையகம்

கல்வி ராஜாங்க அமைச்சரின் மகன்,அலுவலரை தாக்கினாரா ?

கல்வி ராஜாங்க அமைச்சர் வீ.ராதாகிருஷ்ணனின் மகன், கல்வி அமைச்சின் அலுவலர் ஒருவரை தாக்கியதாக சிங்கள ஊடகமான நெத் எஃப்.எம். செய்தி வெளியிட்டுள்ளது.எனினும் இது தொடர்பாக கல்வி அமைச்சு ஊடக அறிக்கை  வெளியிட மறுத்துள்ளது.ஆனால் தாக்குதலுக்கு உள்ளான கல்வி அமைச்சின் அலுவலர், தலங்கம காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து உடனடியாக விசாரணை நடத்தி தமக்கு விளக்கமளிக்குமாறு, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் ராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணனை கேட்ட போது, குறித்த அதிகாரியே தமது மகனை முதலில் சட்டையைப்பிடித்து தாக்கியதாக நெத் எஃப்.எம் இடம் கூறியுள்ளார்.

சொன்னது 5வரி செய்திகள்

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button