செய்திகள்

களனி சுற்றுவட்டம் முதல் ஒருகொடவத்தை வரையான வீதி மூடப்பட்டுள்ளது.

களனி பாலத்தின் அபிவிருத்தி திட்டமொன்றின் காரணமாக கொழும்புக்குள் பிரவேசிக்கும் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இன்று (14) அதிகாலை 5 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதன்படி, களனி சுற்றுவட்டம் முதல் ஒருகொடவத்தை வரையான கொழும்புக்குள் பிரவேசிக்கும் வீதியே இவ்வாறு மூடப்பட்டுள்ளது.

கொழும்புக்குள் பிரவேசிக்கும் வாகனங்கள், களனி சுற்று வட்டத்தின் ஊடாக ஹிங்குருகடே சந்திக்கு பிரவேசித்து, ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க மாவத்தை, ஆமர்வீதி சந்தி, மகா வித்தியாலய மாவத்தை ஊடாக புறக்கோட்டைக்கு செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன். ஆமர்வீதி, பஞ்சிகாஹவத்தை ஊடாக பொரள்ளைக்கு செல்ல முடியும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதேவேளை, கொழும்பிலிருந்து வெளியேறும் வாகனங்கள், ஒருகொடவத்தை சந்தியிலிருந்து களனிதிஸ்ஸ சுற்றுவட்டம் ஊடா பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button