செய்திகள்

களுத்துறையில் கோர விபத்து – ஆறு பேர் பலி!

களுத்துறை வஸ்கடுவ பகுதியில் இரண்டு பஸ்கள் ஒன்றுடனொன்று நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் 43 ஆண்களும் 8 பெண்களும் சிறுவன் ஒருவன் உள்ளடங்களாக 60 பேர் காயமடைந்துள்ளனர்.
3 பெண்களும், மூன்று ஆண்களும் சம்பவமே இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எல்பிட்டியிலிருந்து  கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்று, மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது, எதிர்திசையில் வந்த தனியார் பஸ்ஸுடன் மோதி விபத்து நேர்ந்துள்ளது.

இன்று அதிகாலை 5.15 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related Articles

Back to top button
image download