செய்திகள்

களுத்துறை நகர்- அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி திருக்கோயில்.

வேலவனே உமையவளின் இளமகனே
உலகினையே ஆடவைக்கும் சிவனார் மைந்தா
கால வெள்ளம் அள்ளிவரும் வேதனைகள் மறைந்துவிட
வழி செய்து காத்தருள்வாய் எங்கள் கதிர்வேலவனே..

நாட்டினிலே அச்சநிலை அடியோடு அகன்றுவிட
ஆட்டிப்படைக்கின்ற கொடுநிலைகள் தான் அழிய
போட்டி, பொறாமைகள் பூண்டோடு மறைந்துவிட
காட்டிடுவாய் உன்திறனை எங்கள் கதிர்வேலவனே..

எட்டுத்திசை பாலகர்கள் இனிதெம்மைக் காத்துவிட
முட்டவரும் கொடுவினைகள் எட்டியே ஓடிவிட
சட்டவிதிமுறைகள் சமத்துவத்தை நிறுவிவிட
வாட்டம் நீங்கிவிட வழிதிறப்பாய் எங்கள் கதிர்வேலவனே..

களுத்துறை நகரினிலே காட்சிதந்து அருள்வோனே
அச்சம் அகற்றிவிட அவதரிக்கும் திருமகனே
வேதனைகள் சுமந்து நிற்கும் எங்கள் தமிழ் மக்களையே
விரைந்து வந்து காத்திடுவாய் எங்கள் கதிர்வேலவனே..

உன்னப்பன் சிவனெங்கே அன்னையவள் உமையெங்கே
காக்கும் கடமைகொண்ட மாமன்தான் எங்கு சென்றான்
கூட்டிவந்து காட்டிவிடு, கொடுமைகளை போக்கிவிடு
பாடியுந்தன் அடிபணிந்தேன் எங்கள் கதிர்வேலவனே.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com