...
செய்திகள்

களுத்துறை- பாணதுறை அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில் ..

மேற்கிலங்கை கரையினிலே வீற்றிருக்கும் கந்தா
தொடர்ந்து வரும் துயரநிலை துடைத்தெறிய வருவாய்
பகை கொண்டு பழி சுமக்கும் நிலையெமக்கு வேண்டாம் 
பக்தர்களை இணைத்தருள் தந்திடவே வருவாய்
பாணதுறை வளநகரில் கோயில் கொண்ட கந்தா
பரிதவித்து அல்லலுறும் நிலையகற்றியருள்வாய்
வலிமை கொண்டு முன்செல்லும் வலு எமக்கு வேண்டும் 
அதைத் தந்து உயர்வளிக்க விரைந்து நீ வருவாய் 
வேலாபுரமென்ற பழமை கொண்ட மாநிலத்திலுறையும் கந்தா
வற்றாத நின்னருளைத் தந்திடவே வருவாய்
அச்சமின்றி துணிவுடனே வாழ்ந்திடவே வேண்டும் 
அதற்கான காப்பை அளித்திடவே வருவாய்
முத்தமிழின் மூலவனே எங்குமுறை கந்தா
எப்பொழுதும் உடனிருந்து காத்திடவே வருவாய்
துன்பங்கள் அண்டாமல் துடைத்தெறிய வேண்டும் 
உன்பாதம் பற்றிநிற்கும் எமக்கருள வருவாய்
சூரனின் கொட்டத்தையடக்கி அருள் தந்தவனே கந்தா
சூழவரும் தீயபகை, கொடுமைகளைத் தடுத்திடவே வருவாய்
சுற்றமும், சூழ்நிலையும் நன்மைபெற வேண்டும் 
தாழ்ச்சியில்லா வாழ்வதனை எமக்கருள வருவாய்
தேரேறிப் பவனிவரும் திருமகனே கந்தா
தேசமெல்லாம் உன்கருணை வழங்கிடவே வருவாய்
எங்குமுந்தன் நிருநாமம் ஒலித்திடவே வேண்டும் 
அனைத்து நன்மை தந்தெம்மை வாழவைப்பாய் ஐயா. 
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen