...
செய்திகள்

கள்ள காதலனுடன் இணைந்து கணவனை அடித்து கொன்ற மனைவி

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவில் பிரிதொரு நபருடன் இணைந்து கணவனை அடித்து கொன்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றையசந்தேக நபரையும் பொலிஸார் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சம்பவம் கடந்த 09 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட மாங்குளம் பொலிசார் சந்தேகநபரான மனைவியின் வாக்குமூலத்தை அடிப்படையாகக்கொண்டு மனைவியையும், அவரது இரகசிய காதலனான மற்றுமொரு சந்தேக நபரையும் கைது செய்ததுடன், இன்றைய தினம் சான்று பொருட்களையும் மீட்டனர்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இந்துபுரம் பகுதியில் 36 வயதுடைய முன்னாள் போராளியான நடராசா தனராஜ் 31 வயதான கீதாஞ்சலியை திருமணம் செய்து 8 ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளார். இவர் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதன் பின்னர் திருமணம் செய்துள்ளார். பெற்றோர் இல்லாத நிலையில் மூத்த சகோதரி திருமணம் முடித்துள்ள அதேவேளை மற்றுமொரு இளைய சகோரதி இவரின் பாதுகாப்பில் உள்ளார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen