செய்திகள்

கழிவு கொள்கலன் தொடர்பில் முறைப்பாடு – அரசாங்கம் அறிவிப்பு.

யுக்ரைனிலிருந்து நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட விவசாய கழிவுகள் அடங்கிய
கொள்கலன்கள் தொடர்பில் பாசல் மாநாட்டு அலுவலகத்திற்கு முறைப்பாடு செய்ய
அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கொத்தமல்லி என்ற போர்வையில் தனியார் நிறுவனமொன்றினால், விவசாய கழிவுகள்
அடங்கிய கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு
தெரிவித்துள்ளது.

இவ்வாறான 28 கொள்கலன்கள் தொடர்பில் பாசல் மாநாட்டு அலுவலகத்திற்கு முறைப்பாடு
செய்யுமாறு சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர , அமைச்சின் செயலாளர் விசேட
வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்கவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பாசல் ஒப்பந்தத்திற்கு அமைய ஒரு நாட்டிலிருந்து மற்றுமொரு நாட்டிற்கு விவசாய
கழிவுகளை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், இந்த ஒப்பந்தத்தில்
இலங்கையும் கைச்சாத்திட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட விவசாய கழிவுகளூடாக இலங்கையின் சூழல் கட்டமைப்பிற்கு
பாரிய அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனால் இறக்குமதி செய்யப்பட்டுள்ள அனைத்து கொள்கலன்களையும் யுக்ரைனுக்கு மீள
ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுற்றாடல் அமைச்சு
அறிவித்துள்ளது.

Related Articles

Back to top button