செய்திகள்

கழுத்துறை மாவட்டம் தொடங்கொட அரப்பலாகந்த அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில்..

கழுத்துறை மாவட்டம் தொடங்கொட அரப்பலாகந்த அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் 
மங்கள நாயகி மாரியம்மன் 
மனம் மகிழ்ந்திங்கு எழுந்துவிட்டாள்
தங்கத்திருவுரு கொண்ட அன்னை 
தரணியைக் காக்க வந்துவிட்டாள்
அரப்பலாகந்தையில் குடிகொண்டாள் 
கொடுபகை களைய மனங்கொண்டு
நம்மை நாடியே வந்து விட்டாள்
நம்பிக்கையுடனே வழிபடுவோம்
நிம்மதி தந்து காக்கும் அன்னை 
வளங்கள் பெருக்கிட உளங்கொண்டாள்
கிடைத்தற்கரிய அருள் நமக்கு 
கிட்டிட அன்னையின் தாள் பணிவோம்
துன்பங்கள் போக்கும் அன்னையவள்
ஆறுதலளிக்க வந்துவிட்டாள்
அச்சம் அகற்ற வந்துவிட்ட
தேவியின் அடிபணிந்தருள் பெறுவோம் 
தொடங்கொடை அமர்ந்த அன்னையவள்
தொல்லைகள் யாவுமே வேரறுப்பாள்
கும்பம் வைத்தே பூசிப்போம் – நம்
குலமது வாழ அருள் தருவாள்.
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button