கவிதைநிகழ்வுகள்பதுளை

கவிஞர் கோவுஸ்ஸ ராம்ஜி உலகநாதன் “இவன்” கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு..

பெருந்தோட்ட மக்கள் வாழ்வியலின் நிதர்சனங்களை வெளிக்கொணரும் பண்பாட்டு கவிஞர்
கோவுஸ்ஸ ராம்ஜி உலகநாதன் எழுதிய “இவன்” கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று (23/01) சனிக்கிழமை கோவுஸ்ஸஹீரோ ஸ்டார் விளையாட்டு கழக விளையாட்டு திடலில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது.

கோவுஸ்ஸ ஹீரோ ஸ்டார் விளையாட்டு கழகத்தினரின் ஆதரவில் இடம்பெற்ற இந்நிகழ்வில்
கொழுந்தம்மா கவிபுகழ் கோவுஸ்ஸ- ராம்ஜி உலகநாதன் தான் பிறந்தமண்ணிலே தனது ‘இவன்’ கவிதைநூலை பிரசவிக்கசெய்தமை வரவேற்க்கூடிய அம்சமாகும்.


இதன்போது ஊர்மக்கள், இளைஞர்கள் புடைசூழ பிரதேச கவிஞர்கள், அதிபர்கள்
ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள், சமூக நலன்விரும்பிகளென அனைவரும் ஒன்றுகூடி நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.


அத்தோடு, கவிஞர் ராம்ஜி உலகநாதன் அவர்களின் கலைத்துறை திறமையைப் போற்றி பொன்னாடைப்போர்த்தி பாராட்டியதோடு விருதும் வழங்கி பாராட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


தாம் பிறந்த மண்ணின் பெருமை பேசும் பண்பாட்டு கவிஞனைப் பார்போற்றச் செய்த பெருமைக்குரிய ஏற்பாட்டாளருக்கும் கவிஞர் கோவுஸ்ஸ- ராம்ஜி உலகநாதனுக்கும் எமது வாழ்த்துக்களைத்
தெரிவிக்கின்றோம்.

நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Back to top button