...
செய்திகள்பதுளைமலையகம்

கஹவத்தையில் மரம் முறிந்து விழுந்து தோட்ட குடியிருப்புகளுக்கு சேதம்!

கஹவத்தை, ஓபாவத்தை தோட்ட, திம்புல்வல பிரிவில் தோட்டக் குடியிருப்புகள் மீது அரச மரம் முறிந்து விழுந்ததால் தோட்டக் குடியிருப்புக்கள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் பெருமாள் அவர்கள் தெரிவித்தார்.

நேற்று மாலை பெய்த பாரிய மழைவீழ்ச்சியை தொடர்ந்து இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக தோட்ட மக்கள் தமக்கு அறிவித்தையடுத்து, குறித்த பிரதேசத்திற்கு விஜயம் செய்து, இவ்விடயம் தொடர்பாக கொடக்கவலை பிரதேச செயலாளர், பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் பிராந்திய பணிப்பாளர் திரு.அனுர ஏக்கநாயக்க அவர்களுக்கும் அறிவித்துள்ளதோடு தோட்ட முகாமையாளருக்கு குறித்த மரத்தின் கிளைகளை அகற்றும்படி பணிப்புரை விடுத்துள்ளார்.

அதேவேளை இவ்விடயம் குறித்து தோட்ட வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் கவனத்துக்கு கொண்டு சென்று கூடிய விரைவில் மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதாகும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இச்சம்பவ இடத்திற்கு கொடக்கவெல பிரதேச சபை உறுப்பினர்களான விஜய சங்கர் மற்றும் சரிந்து தர்மசேன ஆகியோரும் சமூகமளித்து இருந்ததாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாள் அவர்கள் மேலும் தெரிவித்தார்.

– நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Back to top button


Thubinail image
Screen