அரசியல்சமூகம்

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் உட்பத்தி திட்டத்தை மீள ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் உற்பத்திக்கான திட்டத்தை ஆரம்பிப்பதற்கு கைத்தொழில் அமைச்சு ஆரம்ப திட்டத்தை தயாரித்துள்ளது.

இதுதொடர்பாக கைத்தொழில் அமைச்சர் நேற்று (08/2) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதுதொடர்பானக அமைச்சரவை தீர்மானம் வருமாறு:

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை வளாகத்திலுள்ள பயன்பாட்டுக்கு உதவாத பொருட்களை அகற்றல்

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை வளாகத்தில் சீமெந்து உற்பத்திக் கருத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு கைத்தொழில் அமைச்சு ஆரம்ப திட்டத்தை தயாரித்துள்ளது. அதற்கமைய, குறித்த வளாகத்திலுள்ள பயன்பாட்டுக்கு உதவாத பொருட்களை அகற்றி தொழிற்சாலை வளாகத்தை துப்பரவாக்குவதற்கு அவ்விடத்தில் கண்காணிப்புச் சோதனையை நடாத்தி பரிந்துரைகள் அடங்கிய தரவு அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்காக ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவின் பரிந்துரைகளுக்கமைய, காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை வளாகத்திலுள்ள பயன்பாட்டுக்கு உதவாத கட்டிடங்கள், வடிவமைப்புக்கள், இயந்திர உபகரணங்கள் மற்றும் இரும்புத்துண்டுகள் மற்றும் வார்ப்புக்கள் போன்றவற்றை அரசாங்க பிரதம விலைமதிப்பீட்டாளரின் மதிப்பீட்டின் அடிப்படையில், அரசாங்கத்தின் பெறுகைச் செயன்முறையைப் பின்பற்றி குறித்த பயன்பாட்டுக்கு உதவாத பொருட்களை அகற்றுவதற்காக கைத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related Articles

Back to top button