செய்திகள்நுவரெலியாமலையகம்

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் சிசுவின் சடலம்!!!

காசல் ரீ நீர்தேக்கத்தில் இறந்த நிலையில் ஆண் சிசுவின் உடலொன்று இன்று காலை மீட்கபட்டதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மீன்பிடித்து கொண்டிருந்த நபர் ஒருவரினால் குறித்த சிசுவின் உடலம் நீர்த்தேக்கத்தில் மிதந்துக்கொண்டு இருப்பதை கண்டு அட்டன் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையிலே பொலிஸாரினால் சிசுவின் சடலம் மீட்கப்படுள்ளது .

சடலமாக மீட்கபட்ட சிசு தொடர்பில் அட்டன் நீதிமன்ற நீதவானின் தலைமையில் மரணவிசாரணைகள் இடம்பெற்றவுடன் சிசுவின் சடலம் டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்கு கொண்டுசெல்லபட உள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button