செய்திகள்நுவரெலியாமலையகம்

காசல்றி நீர்தேக்க கரையோரப் பகுதியில் காட்டுத்தீ

காசல்றி நீர்தேக்க கரையோரப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் இரண்டு ஏக்கர் காடு எரிந்து நாசமாகியது.

மலையகத்தில் தொடரும் வறட்சி காலநிலையிலே இன்று (21) பிற்பகல் 02 மணியளவில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

காசல்றி நீர்தேக்கத்தில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ள நிலையில் இனந்தெரியதோரால் இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் பொலிஸ் பிரிவிக்கு உட்பட்ட ஹட்டன் நோட்டன் பிரதான வீதியின் காசல்றி நீர்தேக்க கரையோர பகுதியான சமர்வில் பகுதியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-மலையக நிருபர் இராமச்சந்திரன்-

Related Articles

Back to top button