செய்திகள்

காட்டு யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு..

மாத்தளையில் காட்டு யானை தாக்கி உயிரிழந்த வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாத்தளை வடக்கு பகுதியில் நேற்றைய தினம் யானையை விரட்டுவதற்காக சென்ற வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர் ஒருவரே யானை தாக்கி உயிரிழந்தார்.

தரவுகளின் அடிப்படையில் 2018 ஆம் ஆண்டில், காட்டு யானை தாக்கியதில் 95 பேர் உயிரிழந்துள்ளனர்.

எனினும் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 115 ஆக பதிவாகியுள்ளது.

இதனடிப்படையில், 2018 ஜனவரி முதலாம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் காட்டு யானை தாக்கியதில் 210 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 319 யானைகள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
image download