செய்திகள்நுவரெலியாமலையகம்

காணாமற்போன யுவதியை கண்டுபிடிக்கும் நடவடிக்ககையில் விசேட மீட்பு படையினரை ஈடுபடுத்துங்கள் – இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்..

பத்தனை டெவன் நீர்வீழ்ச்சியில் தவறிவிழுந்து காணாமற்போனதாக கூறப்படும் லிந்துல பிரதேசத்தை சேர்ந்த யுவதியை கண்டுபிடிக்கும் நடவடிக்ககையில் விசேட மீட்பு படையினரை ஈடுபடுத்துமாறு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நுவரெலியா மாவட்டத்திற்கு பொறுப்பான இராணுவத்தின் கட்டளையிடும் தளபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த நான்கு நாட்களுக்கு முன் இந்த நீர்வீழ்ச்சியில் தவறிவிழுந்து காணாமற்போனதாக கூறப்பட்ட யுவதியை தேடும் பணியை பொலிஸ் மற்றும் இராணுவத்தினர், கடற்படை உதவியுடன் மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் , இன்றைய (22) தினம் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் சம்பவம் இடத்திற்கு  சென்று நிலைமையை  ஆராய்ந்த பின்னர் நுவரெலியா மாவட்டத்திற்கு பொறுப்பான இராணுவத்தின் கட்டளையிடும் தளபதியுடன் கலந்துரையாடி கொழும்பிலிருந்து விசேட படையினரை வரவழைத்து மீட்பு பணியை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதாக இ.தொ.கா ஊடக பிரிவு தெரிவித்தது.

Related Articles

Back to top button