மலையகம்

காணாமல் போனவர் சடலமாக மீட்பு கம்பளை பகுதியில் சம்பவம்

கம்பளை , மரியாவத்தை பலாகுடமாக்க பகுதியில் நான்கு நாட்களுக்கு முன் காணாமல்போயிருந்ததாக தெரிவிக்கப்பட 79 வயதுடைய நபர் இன்று காலை 10 மணியளவில் அப்பகுதியிலுள்ள ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கம்பளை மரியாவத்தை பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான டபிள்யூ.எம்.ஜெயசேன என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நான்கு நாட்களுக்கு முன் காணாமல் போனவரை உறவினர்களும், பிரதேவாசிகளும் தேடியுள்ளதோடு, கம்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்தே குறித்த நபர் இன்று ( 14.05.2018 ) ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவித்த பொலிஸார், மரணம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெறுவதாக தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button