...
செய்திகள்

காணாமல் போன கோபோ பகுதி மாணவி தெப்பக்குளத்தில் சடலமாக மீட்பு

பதுளை கோபோ பெருந்தோட்ட பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் கடந்த 19 ம் திகதி பதுளை நகரில் பிரத்தியேக வகுப்பொன்றுக்கு சென்று வீடு திரும்பாத நிலையில் கஹட்டருப்ப பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து ஊர் பொது மக்களும் பொலிஸாரும் இனைந்து தேடுதல் மேற்கொண்ட போது பிரத்தியேக வகுப்புக்கு கொண்டு செல்லப்பட்ட புத்தகப்பை மற்றும் தேசிய அடையாள அட்டை கைத்தொலைபேசி ஆகியன கோபோ பகுதியில் உள்ள நீர்நிலை ( தெப்பக்குளம்) ஒன்றுக்கு அருகில் மீட்கப்பட்டன .இதனைத் தொடர்ந்து இன்று அதே நீர் நிலையில் இருந்து மாணவியின் சடலமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கஹட்டருப்ப பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen