மலையகம்
காணாமல் போன பெண் சடலமாக மீட்பு
மூன்று நாட்களுக்கு முன் காணாமல் போன பெண் ஒருவரின் சடலம் மாவெலி ஆற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணின் சடலம் இன்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாவலப்பிட்டி, பலந்தொட்ட பகுதியை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயாரான எம். ஈனிமெனிகே (84வயது) என்பவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன் தனது சொந்த தேயிலை தோட்டத்திற்கு சென்ற போதே காணாமல் போனதாக உறவினர்களால் நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தநிலையில் பொலிஸ் மோப்ப நாயின் உதவியுடன் பொலிஸாரும் பிரதேசவாசிகளும் தேடுலில் ஈடுட்டிருந்த வேலையில் தேயிலை தோட்டத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திலிருந்து மாவெலி ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.