செய்திகள்நுவரெலியாமலையகம்

காணாமல் போன யுவதியை தேடும் பணி தீவிரம்; இராணுவத்தினரும் வரவழைப்பு!

279 அடி ஆழமான டெவோன் நீர் வீழ்ச்சியில் விழுந்து காணாமற் போயுள்ள யுவதியை தேடி விசேட தேடுதல் பணி முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (18) மாலை நண்பிகளுடன் நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற போது குறித்த 19 வயது யவதி நீர் வீழ்ச்சியில் விழுந்து காணாமல் போயிருந்தார்.

டி.சந்ரு

லிந்துலை பகுதியில் வசித்த 19 வயதான யுவதியே நீர் வீழ்ச்சியில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button