...
செய்திகள்

காணியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 துப்பாக்கிகள் மீட்பு

வெலிகம, வலான சுகாதார வைத்திய அதிகாரி காரியலயத்துக்கு அருகிலுள்ள காணியொன்றில் புதைத்து மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கைத்துப்பாக்கிகள், 5 மெகசின்கள் மற்றும் 10 தோட்டாக்கள் என்பன நேற்று காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

காலி காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் அதிகாரிகளுக்கு கிடைந்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது மேற்படி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் கைதுசெய்யப்படாத அதேவேளை, குறித்த தோட்டாக்கள் மற்றும் கைத்துப்பாக்கிகள் மறைத்து வைக்கப்பட்டமைக்கான காரணத்தை கண்டறியும் பொருட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Related Articles

Back to top button


Thubinail image
Screen